Mar 29, 2009

கூட்டணி ஆட்சிக்கு தடை விதிக்க வேண்டும்?ஏன்?



ரபரப்பான தேர்தல் நேரம் இது... அரசியல் கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்க களம் இறங்கி விட்டார்கள்... அதாவது ஆட்சியை பிடிக்க தயாராகி விட்டார்கள், அண்மைக்காலமாக தேர்தல் என்றாலே கூட்டணி வைத்து போட்டி போடுவது தான் இப்போது இருக்கின்ற அரசியல் கட்சிகளின் முக்கிய வேலை. இப்படி கூட்டணி வைத்து போட்டியிடுவது சரிதானா? என்று சிந்தித்து பார்த்தோமானால் அது சரியான ஒன்று இல்லை என்பதே சரி ...
ஏன் ? நாட்டை ஆளுகின்ற,அல்லது ஆளப்போகிற கட்சி மக்களுக்கு நன்மை செய்திருந்தால் ஏன் அவர்கள் கூட்டணியை தேடிப்போக வேண்டும்? தனித்தே போட்டியிடலாமே? அண்மைகாலமாக நடைபெறும் தேர்தல்களில் தேசிய கட்சிகளாக இருந்தாலும் சரி அல்லது மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பதில்லை, இது எந்த கட்சியும் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் மக்களுக்கு பல நன்மைகள் வருவதில்லை, உதாரணமாக ஆளும் கட்சி மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகளுக்கு அந்த திட்டத்தில் உடன்பாடு இல்லையென்றால் உடனே அந்த கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி ஆதரவை வாபஸ் வாங்கி விடுவோம் என்று மிரட்டுகின்றன, ஆளும் கட்சியும் மிரட்டலுக்கு பயந்துபோய் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விடுகிறது. இதனால் பாதிக்கப்படுவது ஓட்டு போட்ட குடிமக்கள் தான். அப்படியானால் இதில் நாட்டு மக்களின் நலன் எங்கே தெரிகிறது. மாறாக சுயநலம் தான் எஞ்சி நிற்கிறது... ஆனால் தேர்தல் வரும்போது மட்டும் எங்கள் கூட்டணிக்கு ஒட்டு போட்டால் நாங்கள் வறுமையை ஒழிப்போம், நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்வோம் என்று வாய் கூசாமல் பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
ஆகவே நாட்டு மக்களை இது போன்ற "அண்டபுளுகு, ஆகாசபுளுகு" புளுகும் கட்சிகளிடமிருந்து காப்பாற்ற தேர்தல் ஆணையம் இனி வரும் காலங்களிலாவது ஆரசியல் கட்சிகளின் கூட்டணி முறைக்கு தடை விதிக்க வேண்டும், அப்போது தான் ஒவ்வொரு கட்சிகளின் லட்சணமும் மக்களுக்கு தெரியவரும், மக்களும் உண்மையாக உழைக்கும் கட்சிகளை கண்டறியமுடியும்... நன்மைகளையும் பெற முடியும்

4 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

கவிதா | Kavitha said...

உங்கள் பதிவு

http://blogintamil.blogspot.com/2009/04/010409-lapiz-lazuli.html

இங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் :)

சரவணன் said...

நீங்கள் சொல்வது 100/100 உண்மை.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Blogger templates made by AllBlogTools.com